தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு?? அமைச்சர் விளக்கம்!!

0
minister sengottaiyan
minister sengottaiyan

தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தக் கூடாது என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். மேலும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ரிசல்ட் தொடர்பான சில அறிவிப்புகளையும் அமைச்சர் வெளியிட்டு உள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 3 மாதத்திற்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அரசு சார்பில் தொலைக்காட்சி வாயிலாக பாடம் கற்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கிரேடு அடிப்படையில் வெளியிடப்படலாம் என்று வெளியான தகவலை அமைச்சர் செங்கோட்டையன் மறுத்து உள்ளார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

12 th exams results
10th Exams 

UPSC சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு – தமிழக மாணவர் 7ம் இடம்!!

இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் செங்கோட்டையன், மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்வி கொள்கையில் அரசு அமைத்துள்ள குழு வழங்கும் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவித்தார். 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம் போல மதிப்பெண்கள் அடிப்படையில் தான் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். ஐடெக் லெப் மூலம் அனைத்து மாணவர்களும் கல்வி கற்க முடியும். மேலும் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வேண்டாம் என்பதே அரசின் நிலைப்பாடு என தெரிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here