மருந்தகங்களில் பாரசிட்டமால் மாத்திரைகள் வாங்க மருத்துவரின் பரிந்துரை சீட்டு தேவையா..?- தமிழக அரசு விளக்கம்..!

0

மருத்துவர் பரிந்துரை இல்லாமல் பாராசிட்டமால் மாத்திரைகளை மருந்தகங்களில் வழங்கக் கூடாது என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விளக்கம் அளித்துள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு..!

வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் கொரோனா பரிசோதனையை தவிர்க்க உடல் வெப்ப நிலையை குறைத்துக்காட்ட பாராசிட்டமால் மாத்திரையை பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து, பல மருந்துகங்களில் பாரசிட்டமால் மாத்திரைகள் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனைக்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

இந்த நிலையில் சாதாரண காய்ச்சல் உள்ளவர்கள் மருந்தகங்களில் பாராசிட்டமால் மாத்திரை வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டதாக கூறி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. மருந்தகங்களில் பாராசிட்டமால் மாத்திரையை வழங்க உத்தரவிடக் கோரி ஜோயல் சுகுமார் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

மறைந்தார் நெல்சன் மண்டேலாவின் மகள் ஜிண்ட்ஸி!!

இந்த வழக்கில் இன்று பதிலளித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் பாராசிடமால் மாத்திரை வழங்கக் கூடாது என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் அதே சமயம் மருந்தகங்களில் பாராசிட்டமால் மாத்திரையை வழங்க மருத்துவரின் பரிந்துரை தேவையில்லை என்றும் விளக்கம் அளித்தார். இந்நிலையில் எவ்விதத் தட்டுப்பாடும் இன்றி பாராசிட்டமால் மாத்திரை கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தொடப்பட்ட வழக்கை முடித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here