இந்திய திரை உலகில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 90ஸ் களில் ஏகப்பட்ட படங்களில் முன்னணி ஹீரோயினாக நடித்து வந்தவர் தான் நடிகை மீனா. இவர் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அன்புள்ள ரஜினிகாந்த் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதைத் தொடர்ந்து கோலிவுட் திரையில் முக்கிய நட்சத்திரங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகர் விஜய், அஜித், ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பல ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து வந்தார். கடந்து 2004 ஆம் ஆண்டு, வித்யாசாகர் என்பவரை திருமணம் முடித்து ஒரு அழகான பெண் குழந்தைக்கு தாயாகி உள்ளார்.
அண்மையில் இவரது கணவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். தற்போது அந்த துயரில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண் கவரும் ஆரஞ்சு நிற சுடிதார் அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்தவாறு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இவரின் இப்படியானா சிரித்த முகத்தை பார்த்த ரசிகர்கள் தங்களின் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
View this post on Instagram