ஹிந்திக்கு செல்லும் தமிழ் படம்…,பாலிவுட்டில் ஓங்கும் அட்லீயின் கை…,

0
ஹிந்திக்கு செல்லும் தமிழ் படம்...,பாலிவுட்டில் ஓங்கும் அட்லீயின் கை...,
ஹிந்திக்கு செல்லும் தமிழ் படம்...,பாலிவுட்டில் ஓங்கும் அட்லீயின் கை...,

தமிழ் சினிமா இயக்குனர் அட்லீ ‘தெறி’ படத்தை ஹிந்தியில் இயக்க இருப்பதாகவும், அதில் நடிகர் வருண் தவான் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

அட்லீ திரைப்படம்

சமீப காலமாக தமிழ் மொழியில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படங்கள் பலவும் ஹிந்தி மொழியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படம் தற்போது ஹிந்தியில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்க அக்ஷய் குமார் நடித்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதே போல, இளைஞர்களை வெகுவாக கவர்ந்த ‘லவ் டுடே’ திரைப்படமும் ஹிந்தியில் ரீமேக் ஆவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயங்குவதாகவும் நடிகர் வருண் தவான் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டுமாக ஒரு தமிழ்ப்படம் ஹிந்தியில் தயாரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

பிரபல நடிகைக்கு நேர்ந்த சோகம்…, இப்படி ஆகிவிட்டதே…, வருத்தத்தில் ரசிகர்கள்!!

அதாவது, இயக்குனர் அட்லீ இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ திரைப்படம் ஹிந்தியில் தயாரிக்கப்பட உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.இந்த திரைப்படத்தை அட்லீயே இயக்க இருப்பதாக சில தகவல்கள் கிடைத்துள்ளது. இயக்குனர் அட்லீ தற்போது நடிகர் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ என்ற நேரடி ஹிந்தி திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here