பொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதில் சிக்கல்? வங்கி கணக்கில் செலுத்துவது குறித்து அரசுக்கு கேள்வி!!

0
பொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதில் சிக்கல்? வங்கி கணக்கில் செலுத்துவது குறித்து அரசுக்கு கேள்வி!!
பொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதில் சிக்கல்? வங்கி கணக்கில் செலுத்துவது குறித்து அரசுக்கு கேள்வி!!

ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசாக வழங்கப்படும் ரூபாய் 1000 பணத்தை வங்கி கணக்கில் செலுத்தலாமா?? என்ற கேள்விக்கு தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் உத்தரவு :

தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரூ.1000 ரொக்க பணத்துடன், பொங்கல் சாமான்களை வழங்குவதாக அரசு சமீபத்தில் அறிவித்தது. இதற்கான டோக்கன் விநியோகிக்கும் பணிகள் நாளை தொடங்கப்பட உள்ள நிலையில், தற்போது இதில் ஒரு சட்ட சிக்கல் எழுந்துள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது பொங்கல் பரிசுத் தொகை, ரூ.1000 த்தை வங்கி கணக்கில் செலுத்தாமல், நேரடியாக பயனர்களின் கணக்கில் வழங்கப்படும் என அமைச்சர்கள் சமீபத்தில் அறிவித்தனர்.

தமிழக ஒப்பந்த செவிலியர்களுக்கு குட் நியூஸ்., ரூ.18000 சம்பளத்தில் மீண்டும் பணி வழங்க முடிவு!!

இந்த நிலையில், இந்த ரொக்க பணத்தை ரேஷன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த முடியுமா? என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இந்த கேள்விக்கு தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். உயர் நீதிமன்றத்தின் இந்த திடீர் உத்தரவால், தமிழக அரசு பொங்கல் பரிசு தொகை வழங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here