ஹாலிவுட் திரையில் பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வரும் கரோல் மால்டசி, என்பவரை அவரது ஆண் நண்பர் கொலை செய்து உடலை துண்டு துண்டாக பிரிட்ஜில் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விரைவில் சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் நடிகர் தனுஷ் – இயக்குநர் யாருன்னு நீங்களே பாருங்க!!
கொடூர செயல்:
இத்தாலி நாட்டை சேர்ந்த கரோல் மால்டசி என்பவர், பிரபல ஹாலிவுட் நடிகையாக வலம் வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருந்த நிலையில், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து தனியே வாழ்ந்து வந்தார். இதனையடுத்து, அவருக்கு அண்மையில் ஒரு ஆண் நபரின் அறிமுகம் கிடைத்தது. அவருடன் லிவிங் முறையில் வாழ்ந்து வந்த இவர், அவருடன் எடுத்து கொண்ட ரகசிய போட்டோக்களை இணையத்தில் பகிர்ந்து வந்தார். இந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் அண்மையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த அந்த ஆண் நபர், மால்டசியை சுத்தியால் தாக்கி கொன்றுள்ளார்.
மேலும், அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி சிக்கன், மட்டன் போன்று ப்ரிட்ஜில் சேமித்து வைத்துள்ளார். யாருக்கும் சந்தேகம் வர கூடாது என்பதற்காக, மால்டசியை காணவில்லை என போலீசில் புகாரளித்துள்ளார். கொஞ்ச நாட்களுக்கு பிறகு, உடல் அழுக ஆரம்பித்ததால் அதை வெளியில் எடுத்து சென்று எரித்துள்ளார். இந்த வழக்கில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இவர், போலீசார் விசாரணையில் மேற்கண்ட உண்மையை தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் ஹாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்