விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட தர்ஷன் தற்போது மீண்டும் ஒரு படத்தில் கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதை கேள்வி பட்ட ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
பிக் பாஸ் தர்ஷன் தியாகராஜா:
விஜய் டிவியின் ரசிகர்கள் ஆவலுடன் பார்த்து ரசித்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனின் போட்டியாளராக இருந்தவர் தர்ஷன். இவர் தான் சீசன் 3யின் வெற்றியாளராக வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசன் தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் ஒரு படத்தில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என அப்போதே அறிவித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து இயக்குனர் கே. எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாக இருக்கும் கூகுள் குட்டப்பா என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக லாஸ்லியா நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தின் வேலைகள் எல்லாம் முடிந்து திரைப்படம் வெகு விரைவில் திரைக்கு வர உள்ளது என படக்குழுவினர் கூறி வருகின்றனர்.
மேலும் தற்போது நடிகர் தர்ஷன் புதிதாக ஒரு படத்தில் கமிட் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் அய்யனார் இயக்க உள்ளதாகவும், தர்சனுக்கு ஜோடியாக சமீபத்தில் வெளிவந்த சிவகுமாரின் சபதம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை மாதுரி ஜெயின் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தெலுங்கு நடிகை லக்ஷ்மி மஞ்சுவும் இந்த படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறி வருகின்றனர் படக்குழுவினர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்