நடிகை தமன்னா தற்போது 66 வயதான நடிகர் சிரஞ்சீவியுடன் இணைந்து வேதாளம் படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.
தமன்னா படத்தின் அப்டேட்:
தமிழ் திரையுலகில் கேடி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளவர் நடிகை தமன்னா. விஜய், சூர்யா, அஜீத் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால், வெப் சீரிஸில் நடித்து மிகவும் புகழ் அடைந்தார். இந்த நிலையில் நடிகர் அஜீத் நடிப்பில் உருவான வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் விரைவில் வரவுள்ளது.
இந்த படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி நடிக்க உள்ளார். அறுபத்தி ஆறு வயதான இவருக்கு நாயகியாக நடிக்க தமன்னா கமிட்டாகியுள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், தனக்கு திரைக்கதை பற்றி எல்லாம் கவலை இல்லை என்றும் பணம் கொடுத்தால் நடிப்பேன் என்று ஓப்பனாக பேசியுள்ளாராம். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்