ஓபிஎஸ் மனைவி ஜெயலட்சுமி மாரடைப்பால் உயிரிழப்பு – தமிழக முதல்வர் நேரில் சென்று ஆறுதல்!!

0
ஓபிஎஸ் மனைவி ஜெயலட்சுமி மாரடைப்பால் உயிரிழப்பு - தமிழக முதல்வர் நேரில் சென்று ஆறுதல்!!
ஓபிஎஸ் மனைவி ஜெயலட்சுமி மாரடைப்பால் உயிரிழப்பு - தமிழக முதல்வர் நேரில் சென்று ஆறுதல்!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி ஜெயலட்சுமி மாரடைப்பால் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

முதல்வர் ஆறுதல்:

அதிமுகவின் கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தவர் தேனி போடியைச் சேர்ந்த ஓ. பன்னீர்செல்வம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதில் குறிப்பாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால், தமிழகத்தின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். இதனை அடுத்து தமிழகத்தின் நிதி அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். ஜெயலலிதாவின் இறப்புக்கு பின் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பதவி ஏற்று கொண்டார். தற்போது, போடி சட்டமன்றத்தின் உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

ஓபிஎஸ் மனைவி ஜெயலட்சுமி மாரடைப்பால் உயிரிழப்பு - தமிழக முதல்வர் நேரில் சென்று ஆறுதல்!!
ஓபிஎஸ் மனைவி ஜெயலட்சுமி மாரடைப்பால் உயிரிழப்பு – தமிழக முதல்வர் நேரில் சென்று ஆறுதல்!!

இப்படி பல்வேறு, பதவிகளை வகித்து வரும் ஓபிஎஸ் அதிமுக என்ற பிரதான எதிர்க்கட்சியின் முக்கிய தூணான எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருக்கிறார். நேற்றைக்கு நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் கூட ஜெயலலிதா பல்கலையை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் தீர்மானத்தை எதிர்த்து சட்டசபையை விட்டு வெளியேறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத் தகுந்தது.

ஓபிஎஸ் மனைவி ஜெயலட்சுமி மாரடைப்பால் உயிரிழப்பு - தமிழக முதல்வர் நேரில் சென்று ஆறுதல்!!
ஓபிஎஸ் மனைவி ஜெயலட்சுமி மாரடைப்பால் உயிரிழப்பு – தமிழக முதல்வர் நேரில் சென்று ஆறுதல்!!

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஓபிஎஸ் மனைவி ஜெயலட்சுமி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருப்பதாக ஜெம் மருத்துவமனை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 63. மேலும், இந்த மறைவுக்கு பல்வேறு தலைவர்களும், பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று கதறி அழுத பன்னீர்செல்வம் அவர்களின் கையை பிடித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி அவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here