மு. க. ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய நடிகர் பவன் கல்யாண் – எதற்காக இந்த புகழாரம்!!!

0

தெலுங்கு சினிமாத்துறையின் முக்கிய நடிகரான பவன் கல்யாண் தற்போது ஹிந்தியில் வெற்றிகரமாக ஓடிய “பிங்க்” என்ற திரைப்படத்தினை ரீமேக் செய்து நடித்திருந்தார். அந்த திரைப்படத்தினை “வக்கீல் சாப்” என்ற பெயரில் வெளியிட்டு இருந்தனர். பவன் கல்யாண் ஒரு நடிகர் மட்டும் கிடையாது, அவர் ஒரு அரசியல் பிரமுகரும் கூட. இவர் சமீபத்தில் ட்வீட் ஒன்றினை பதிவிட்டு இருந்தார். அதில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பற்றி பேசி இருந்தார். அந்த டீவீட்டில் ‘அன்பிற்குரிய தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள். எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் அரசியல் செய்ய வேண்டும். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் செய்ய கூடாது. அதை வார்த்தைகளால் அல்ல, செயல்களால் நீங்கள் செய்து வருகிறீர்கள். உங்களது ஆட்சி நிர்வாகம் உங்கள் அரசின் செயல்பாடுகள், உங்கள் மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்து கட்சிகளுக்கும் ஊக்கமளிக்கும் விதத்தில் உள்ளது. மனமார்ந்த வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here