விஜய் டிவியில் TRP ரேட்டிங்கில் முதல் இடத்தில் இருக்கும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வெண்பா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஃபரீனா. இந்நிலையில் இவர் கர்ப்பம் அடைந்த நாளிலிருந்து தனது கர்ப்பகால புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார்.
பல்வேறு வித திருப்பங்களுடன் மிக பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் தனக்கு இரட்டை குழந்தை பிறந்ததை தனக்கு மருத்துவம் பார்த்த டாக்டர் மூலம் அறிகிறார் கண்ணம்மா.மேலும் இந்த உண்மையை தன்னுடைய மாமியார் சௌந்தர்யாவிடம் கேட்கிறார். இதற்கு சௌந்தர்யா என்ன சொல்லப் போகிறார் என்பது போன்று கதை நகர்கிறது.
இந்நிலையில் அந்த சீரியலில் தனது வில்லத்தனத்தால் அனைவரையும் உருட்டி மிரட்டி வருபவர் வெண்பா என்ற ஃபரீனா. இவர் தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு முதன் முறையாக கர்ப்பம் தரித்து உள்ளார்.இவர் கர்ப்பம் அடைந்த ஒரு சில மாதங்களில் இருந்தே தனது போட்டோ ஷூட் வேலைகளை ஆரம்பித்து விட்டார்.
அதிலும் அளவில்லாத வகையில், தண்ணீருக்கு அடியில், மரத்தடியில், குதிரையுடன்,பாத் டாப் என கண்ணுக்கு படும் அனைத்து இடங்களிலும் சரமாரியாக போட்டோ ஷூட் நடத்தி அதை புகைப்படமாகவோ அல்லது வீடியோவாகவோ இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பச்சை பசேலென இருக்கும் தோட்டத்தின் நடுவே பச்சை பட்டு உடுத்தி போட்டோ ஷூட் நடத்தி உள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது இன்ஸ்டாவில் பகிர்ந்து உள்ளார்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்