நடிகர் சூர்யாவின் பெயரில் நடந்த மோசடி.. மக்களுக்கு நிறுவனம் வெளியிட்ட எச்சரிக்கை!!

0

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சூர்யாவின் தயாரிப்பு நிறுவமான 2டி நிறுவனத்தின் பெயரில் சிலர் போலியான ஈமெயில் அக்கவுன்ட்டுகளை உருவாக்கி அப்பாவி மக்களிடம் பணம் மோசடி செய்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளது.

நடிகர் சூர்யா கடந்த 2013 ஆம் ஆண்டு பட தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனத்தை தொடங்கினார். தற்போது வரை இந்த நிறுவனம் பன்னிரண்டுக்கும் அதிகமான படங்களை தயாரித்துள்ளது. சூரரை போற்று, பொன்மகள் வந்தாள், கடைக்குட்டி சிங்கம் போன்ற வெற்றி படங்களை தயாரித்தது 2டி நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி சினிமா யூனியனில் அடையாள அட்டை வாங்கி தருவதாக கூறி பணப்பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.  இந்த நிறுவனத்தின் சார்பில் தற்போது இந்த பண மோசடி குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்நிறுவனத்தின் சார்பில் மக்களுக்கு இதுகுறித்த தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் இத்தகைய போலியான விளம்பரங்களை பார்த்து ஏமாந்து தங்களுடைய தகவல்களையும், பணத்தையும் அளிக்க வேண்டாம். மேலும் மிகுந்த எச்சரிக்கை மற்றும் கவனத்துடன் இருக்குமாறும் 2டி நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here