தமிழ் மொழியில் கேடி படத்தில் தன்னுடைய வில்லத்தனத்தால் அறிமுகமானவர் நடிகை தமன்னா. தற்போது ஐஸ் கட்டிகள் வைத்து முகத்தின் அழகை பராமரிப்பது எப்படி என்பது போன்ற ஒரு வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
நடிகை தமன்னா ஹிந்தி திரையுலகில் சாந்த் சே ரோசன் செகரா என்று படத்தின் மூலம் முதன் முதலில் திரையுலகில் தடம் பதித்தார். அதன் பிறகு தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடிக்க தொடங்கினார். இந்நிலையில் தமிழில் அவர் என்ட்ரி ஒரு வில்லி கதாபாத்திரமாகவே இருந்தது. அதன் பிறகு SJ சூர்யா அவர்களின் வியாபாரி படத்தின் மூலம் ஒரு நாயகியாக அறிமுகமானார்.
அதன் பிறகு தமன்னா மற்றும் தனுஷ் நடிப்பில் வெளியான படிக்காதவன் படம் தமிழில் 100 நாட்கள் ஓடி மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் இந்த படம் தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் பட்டையை கிளப்பியது. அதை தொடர்ந்து அவருக்கு பல மொழிகளில் பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதை பயன்படுத்தி சினிமா துறையில் நல்லதொரு இடத்தை பிடித்து உள்ளார்.
தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் காலையில் எழுந்தவுடன் முகத்தில் தோன்றும் வீக்கங்களை ஐஸ் கட்டிகள் மூலம் சரி செய்யலாம் எனவும், இது நல்ல பலனை தருவதாகவும் கூறியுள்ளார். இந்த வீடியோ பலரை வெகுவாக ஈர்த்து வருகிறது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்