51 ஆயிரம் பேருக்கு அதிரடியாக அரசு பணி…,  நியமன ஆணையை வழங்க திட்டமிட்டுள்ள மத்திய அரசு!!

0
51 ஆயிரம் பேருக்கு அதிரடியாக அரசு பணி...,  நியமன ஆணையை வழங்க திட்டமிட்டுள்ள மத்திய அரசு!!
நாடு முழுவதும் உள்ள அரசு துறையில் லட்சக்கான காலிப் பணியிடங்கள் கொட்டிக்கிடக்கின்றன. இதனை போட்டி தேர்வுகள் மற்றும் நேர்முக தேர்வுகள் மூலமாக தேர்வாணையம் நிரப்பி வருகிறது. கடந்த மாதம் ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்க வேண்டும் என்ற ரோஜ்கார் மேளா திட்டத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதன்படி, கடந்த மாதமே சுமார் 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, கடந்த வாரம் 71 ஆயிரம் பேருக்கும் பல்வேறு இடங்களில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டிருந்தது. தற்போது, இதன் அடுத்த கட்டமாக இன்று (நவம்பர் 30) 51 ஆயிரம் பேருக்கு பிரதமர் மோடி தலைமையில் காணொலி மூலம் பணி நியமன ஆணை வழங்கப்பட இருக்கிறது. இதில், ரயில்வே அமைச்சகம், உள்துறை அமைச்சகம், அஞ்சல் துறை, உயர் கல்வித்துறை, பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், வருவாய்த்துறை உள்ளிட்ட துறையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here