விஷவாயு கசிவால் 3 பெண்கள் பலி.. குழந்தை உட்பட 4 பேர் மருத்துவமனையில் அனுமதி., நடந்தது என்ன??

0
விஷவாயு கசிவால் 3 பெண்கள் பலி.. குழந்தை உட்பட 4 பேர் மருத்துவமனையில் அனுமதி., நடந்தது என்ன??

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் கழிவறைக்கு சென்றபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். அங்கு அவரது அலறல் சத்தம் கேட்டு அவரை மீட்பதற்காக சென்ற மகளும் மயங்கி விழுந்துள்ளார். இதை அறிந்த உறவினர்கள், இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக  மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.

தமிழக மக்களே., இந்த பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக மின்தடை., மின் துறை வெளியிட்ட அறிவிப்பு!!

இதேபோன்று பக்கத்து தெருவில் உள்ள ஒரு சிறுமியை, விஷவாயு தாக்கி மயக்கமுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழக்க, பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது . இதைத் தவிர மேலும் ஒரு சிறுமி உள்ளிட்ட 4 பேர் விஷவாயு தாக்கி, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அடுத்தடுத்து 1 சிறுமி உள்பட மூன்று பெண்கள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here