நாளை முதல் ரேஷன் கடைகளில் 14 வகை மளிகை பொருட்கள் மற்றும் கொரோனா நிவாரண நிதி ரு.2000… அமைச்சர் சக்கரபாணி தகவல்!!!

0

தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நாளை முதல் ரேஷன் கடைகளில் 14 பொருட்கள் அடங்கிய மளிகைத் தொகுப்பும், 2வது தவணையாக ரூ.2,000 யும் வழங்கப்படும் என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் மற்றும் கொரோனா நிதி இரண்டாவது தவணையான ரூ.2000 ஐயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் கடந்த மே மாதம் முதல்கட்டமாக ரூ.2,000 நிவாரணம் வழங்கப்பட்டு விட்டது.

இவ்வாறு பொருட்கள் வழங்கப்படுவதை மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், கூட்டுறவு சங்கத்தின் இணைப் பதிவாளர், மாவட்ட வழங்கல் அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் ஆங்காங்கே ஆய்வு செய்து கொரோனா நிவாரணம் வழங்கப்படுவதை உறுதி செய்வர்.ஒரு ரேஷன் கடையில் 75 முதல் 200 பேர் வரை தினசரி மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, மளிகை பொருட்கள் தொகுப்பை பெறுவதற்கு யாரும் அச்சப்பட வேண்டியதில்லை. நாளை முதல் தமிழக அரிசி அட்டைதாரர்கள் ரேஷன் கடைகள் மூலம் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் கொரோனா நிவாரண நிதி இரண்டாம் தவணை ரூ.2000 ஐ பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here