கவர்ச்சியா… கதாபாத்திரமா… ரசிகருக்கு நச் பதிலளித்த வாணி போஜன்!!!

0

முன்பெல்லாம் வெள்ளித்திரையில்  வாய்ப்புகள் குறைந்ததை  அடுத்து சின்னத்திரையில் வாய்ப்புகள் தேடுவர். ஆனால் இன்றோ சின்னத்திரையில் தங்களின் முத்திரையை பதித்து கொண்டு இருக்கும் போது வெள்ளித்திரையிலும்  களம் கண்டு பட்டைய கிளப்பி வருகின்றனர்.அந்த வரிசையில் வந்தவர் தான் நடிகை வாணி போஜன். இவர் தற்போது வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்து வருகிறார். அதன் அடிப்படையில் ரசிகர்கள் சிலர் அவரிடம் பல கேள்விகளை கேட்டு உள்ளனர். அதற்கு அவரும் அசத்தலான பல பதில்களை கூறியுள்ளார்.

வாணி போஜன் தமிழ் சினிமாவில் ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். இதற்கு முன்பு சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமடைந்தவர். சின்னத்திரை நயன்தாரா என்று தான்  வாணி போஜனை பலர் அழைப்பார்கள். அந்த அளவிற்கு சின்னத்திரையில் பிரபலமாக இருந்தார். இப்போது வெள்ளித்திரையில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டு உள்ளார்  வாணி போஜன்.

அவரிடம் ரசிகர் ஒருவர் சின்னத்திரையில் பல வருடங்களாக நடித்து உள்ள நீங்கள் , தற்போது வெள்ளித்திரையில் கவனம் செலுத்த காரணம் என்ன என  கேட்டுள்ளார்.அதற்கு வாணி போஜன் எனக்கு எல்லா கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது, அது சின்னத்திரையில் நடக்குமா என்று தெரியவில்லை எனவே சினிமாவில் ஆர்வம் காட்டி வருகிறேன் என கூறியுள்ளார். இன்னொரு ரசிகர் சினிமாவில் ஜெயிப்பதற்கு கவர்ச்சி முக்கியமாக கதாபாத்திரம் முக்கியமா என கேட்டார். அதற்கு சினிமாவில் ஜெயிப்பதற்கு இவை இரண்டும்  முக்கியமில்லை திறமைதான் முக்கியம் எனவும் கூறியுள்ளார்.

மேலும் வாணி போஜன் தற்போது  மலேசியா டு அம்னீசியா படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் கதைப்படி திருமணத்திற்கு பிறகும் ஒரு பெண்ணிடம் ரகசிய தொடர்பு வைத்திருப்பார் வைபவ் அதை தெரிந்தும் வாணி போஜன் மன்னித்து ஏற்றுக் கொள்வார். இவ்வளவு பெருந்தன்மையுடன் இருப்பது சரியா? சாத்தியமா? என ரசிகர் கேள்வி கேட்டுள்ளார்.அதற்கு அவர்  குடும்பத்தின் நலன் கருதி பல பெண்கள் தங்களது கணவனை ஏற்றுக்கொள்கிறார்கள். அதிலும் ஒரு சில பெண்கள் துரோகத்தை தாங்க முடியாமல் வெறுத்து விடுகிறார்கள். இதில் குடும்பத்திற்காக ஏற்றுக்கொள்ளும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன் என கூறியுள்ளார்.  இவ்வாறு ரசிகர்களின் கேள்விகளுக்கு அசத்தலான பதிலடியை வழங்கி உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here