லிட்டர் 80 ரூபாயை தாண்டிய பெட்ரோல் விலை – 11 வது நாளாக விலை உயர்வு

0
petrol diesel price
petrol diesel price

கொரோனா உலகம் முழுவதும் பரவி இருக்கும் நிலையில் உலக நாடுகள் அனைத்தும் தத்தளித்து வருகின்றன மேலும் 11 வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

தொடர்ந்து 11வது நாளாக உயர்ந்த பெட்ரோல் டீசல் விலை

crude oil
crude oil

வாகன போக்குவரத்து கொரோனா ஊரடங்கால் முடங்கியது.அதனால் பெட்ரோல்,டீசல் விற்பனை மிகவும் குறைந்தது எனவே எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் விலையை நிர்ணயிக்கவில்லை.ஆனால் இப்பொழுது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் நிலையில் வாகனங்கள் பெருமளவில் இயங்க தொடங்கிய நிலையில் கடந்த ஜூன்  7ம் தேதி முதல் பெட்ரோல் டீசல் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய் சர்வதேச சந்தையில் விலை இறக்குமதியின் செலவு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும்   டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினமும் நிர்ணயிக்கின்றன. கடந்த மார்ச் 16ம்  தேதிக்கு பின் எண்ணெய் விலை மாற்றி அமைக்கவில்லை.ஏப்ரல் மாதம் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 20 டாலருக்கும் கீழ் சென்றது.ஊரடங்கால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு பெட்ரோலுக்கு லிட்டருக்கு 10, டீசலுக்கு 13 என கலால் வரியை உயர்த்தியது.மாநிலங்களும் வாட் வரியை உயர்த்தின.கடந்த 7ம் தேதியில் இருந்து  பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. எனவே  இன்று 11வது நாளாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இன்றைய பெட்ரோல் டீசல் விலை

petrol diesel price
petrol diesel price

இன்று சென்னையில் பெட்ரோல் விலை 49 காசுகள் லிட்டருக்கு உயர்ந்து 80.86 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் விலை 52 காசுகள் லிட்டருக்கு  உயர்ந்து, 73.69 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 11 நாட்களில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாய் 32 காசுகளும், டீசல் 5 ரூபாய் 47 காசுகளும் உயர்ந்துள்ளன.டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 55 காசுகள் லிட்டருக்கு  உயர்ந்து ஒரு லிட்டர் 77.28 ரூபாய்க்கு,டீசல் விலை 69 காசுகள் லிட்டருக்கு உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் 75.79 ரூபாய்க்கு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here