RR vs RCB எலிமினேட்டர்.. RCB யின் வெற்றி நடை தொடருமா?? ராஜஸ்தானுடன் இன்று பலப்பரீட்சை!! 

0
RR vs RCB எலிமினேட்டர்.. RCB யின் வெற்றி நடை தொடருமா?? ராஜஸ்தானுடன் இன்று பலப்பரீட்சை!! 

2024 ஐபிஎல் தொடரின் Eliminator 1 போட்டியில், சஞ்சு சாம்சனின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது, டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் மோத இருக்கிறது. இந்த போட்டியானது, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 5

இந்த போட்டிக்கான ராஜஸ்தான் அணியை பொறுத்த வரையில், சஞ்சு சாம்சன், ரியான் பராக், ஹெட்மியர், என பேட்டிங்கில் சிறந்து விளங்கினாலும், பவுலிங்கில் தான் சற்று தடுமாற்றமாகவே உள்ளது. ஆனால், சுழற்பந்து வீச்சில் அஸ்வின் மற்றும் சாஹல்  எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக திகழலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

இதை போல, பெங்களூர் அணியிலும், விராட் கோலி, டு பிளெசிஸ், ரஜத் படிதார் என அதிரடியான பேட்டிங்கும், முகமது சிராஜ், யாஷ் தயாள், லாக்கி பெர்குசன் என பலமான பவுலிங்கும் கொண்டுள்ளது. இதனால், அசுர பலத்துடன் திகழக்கூடிய இரு அணிகளுக்கு நடைபெற இருக்கும் போட்டிக்கு அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here