இசையமைப்பாளர் தன் மகளுடன் இனிய பயணம்.. இணையத்தில் ட்ரெண்டாகும் கியூட் வீடியோ!!!

0

இவ்வுலகில் மிகவும் அற்புதமான உறவு என்றால் அப்பா -மகள் உறவு என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு அவர்களின் புரிதல் பாசம் இருக்கும். தான் பெற்ற பெண் குழந்தையை தான் அம்மாவாக பாவிப்பதே நிறைய அப்பாக்களின் பாசம் ஆகும். இந்நிலையில் தன் இசையால் அனைவரையும் கட்டி போடுபவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இவர் தனது மகளுடன் மிக மகிழ்ச்சியாக நடந்து செல்லும் வீடியோ வெளியாகி வைரல் ஆகி கொண்டு இருக்கிறது.

மகளின் ஆசைகளை நிறைவேற்றுவதே  இந்த உலகின் பெரும்பாலான அப்பாக்களின் ஆசையாகவும் கனவாகவும் உள்ளது. தான் பெற்ற மகளின் ஒவ்வொரு அசைவுகளையும் ரசிப்பதே இந்த தந்தைகளின் பகுதி நேர வேலையாக இருக்கும். இதை மெய்ப்பிக்கும் வகையில் திரைப்படங்களும் உள்ளன. சிவாஜி – நதியாவின் அன்புள்ள அப்பா தொடங்கி தெறி,தங்க மீன்கள்,தெய்வத்திருமகள்,அபியும் நானும்,விஸ்வாசம், என பல திரைப்படங்களை உதாரணங்களாக கூறலாம்.

இந்நிலையில், தனது இசையால் அனைவரையும் தன் வசப்படுத்தியபவர்  யுவன் சங்கர் ராஜா. இவரின் இசை அனைத்து தரப்பினரும்  கேட்கும் வகையில் அமையும். காதல், சோகம் ,பாசம், சந்தோசம் என்ற எல்லாத்தையும் இவரின் இசையில் அமைந்து இருக்கும். மேலும் அதற்கு அப்படியே எதிர்ப்பதமாக துள்ளல் இசையிலும் தன் திறமையை காட்டியவர். அந்த இசையமைப்பாளர் யுவன் அவர்கள் தனது அழகிய செல்ல மகளின் கையை பிடித்து கொண்டு ஒரு அழகான இனிமையான  பயணம்  செல்வது போன்ற ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோ அவரின் ரசிகர்களால் வைரல் ஆகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by U1 (@itsyuvan)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here