சர்வதேச டேபிள் டென்னிஸ் (WTT): தொடர் வெற்றிகளை குவிக்கும் இந்தியாவின் மானவ் தக்கர்!!

0
சர்வதேச டேபிள் டென்னிஸ் (WTT): தொடர் வெற்றிகளை குவிக்கும் இந்தியாவின் மானவ் தக்கர்!!
சர்வதேச டேபிள் டென்னிஸ் (WTT): தொடர் வெற்றிகளை குவிக்கும் இந்தியாவின் மானவ் தக்கர்!!

சர்வதேச டேபிள் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் மானவ் தக்கர் தைவான் வீரரை 3-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அசத்தி உள்ளார்.

சர்வதேச டேபிள் டென்னிஸ்:

சர்வதேச அளவிலான டேபிள் டென்னிஸ் (WTT) தொடர் ஜோர்டானின் தலைநகரமான அம்மானில் கடந்த 6ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்தியாவின் நட்சத்திர வீரர்கள் பலர், பங்கு பெற்றுள்ள இந்த தொடரில், இளம் வீரர்களாக, மானவ் தக்கர், ஸ்ரீஜா அகுல உள்ளிட்டோரும் கலந்து கொண்டு உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதில், ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் மானவ் தக்கர் முதல் சுற்றில், சீன வீரரை 3-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 2ம் சுற்றுக்கு தகுதிப் பெற்றார். இன்று நடைபெற்ற இந்த 2ம் சுற்றில், மானவ் தக்கர், தைவான் நாட்டை சேர்ந்த, லி ஹ்சின்-யாங்கை எதிர்கொண்டார்.

தீபாவளி கொண்டாட்டங்களுக்கு புதிய நடைமுறைகள்., அமலுக்கு வந்த அதிரடி மசோதா!!

இந்த போட்டியில், முதல் செட்டை 11-6 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றிய மானவ் தக்கர், அடுத்தடுத்த 2 செட்டை 12-14, 8-11 என போராடி இழந்தார். இதையடுத்து தொடங்கப்பட்ட செட்களில், ஆரம்ப முதல் வேகம் காட்டிய, மானவ் தக்கர் 11-9, 11-4 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம், 5 செட்டுகளில் 3-2 என்ற கணக்கில் மானவ் தக்கர் தைவான் வீரரை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here