ஒரே ஒரு பட அப்டேட் கேட்டதற்கு கண்டபடி பேசிய ஜூனியர் NTR.., அப்படி என்ன தான் நடந்துச்சு!!

0
ஒரே ஒரு பட அப்டேட் கேட்டதற்கு கண்டபடி பேசிய ஜூனியர் NTR.., அப்படி என்ன தான் நடந்துச்சு!!
ஒரே ஒரு பட அப்டேட் கேட்டதற்கு கண்டபடி பேசிய ஜூனியர் NTR.., அப்படி என்ன தான் நடந்துச்சு!!

நடிகர் ஜூனியர் NTR சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளரை முறைத்து பேசியது இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

நடிகர் ஜூனியர் NTR:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஜூனியர் NTR. இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த RRR திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று சாதனை படைத்தது. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் அரங்கத்தில் இருப்பவரை நடனமாட செய்தது. மேலும் இந்த பாடல் ஆஸ்கர் இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தற்போது ஜூனியர் NTR கொரட்டாலா சிவா படைப்பில் உருவாகும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஜூனியர் NTR சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அங்கிருந்த தொகுப்பாளினி ஜூனியர் NTR நடிக்கும் 30 வது படத்தின் அப்டேட் குறித்து கேள்வி எழுப்பி ஜூனியர் NTRயை கோபமடைய செய்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, பொதுவாக நாங்கள் எடுக்கும் புதிய படத்தை குறித்து எந்த ஒரு அப்டேட்டையும் வெளியே சொல்ல முடியாது. உங்களின் ஆர்வம் எங்களுக்கு புரிகிறது.

சன் டிவி ஹீரோவுடன் இணைந்த விஜய் டிவி நடிகை., சீரியலை தாண்டி தொடரும் புதிய உறவு.., இதென்ன புதுசா இருக்கு!!

ஆனால் நீங்கள் கேட்கும் அப்டேட்டால் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு மிகுந்த அழுத்தத்தை கொடுக்கிறது. அதையும் மீறி உங்களுக்கு அப்டேட் கொடுத்தால், அது பிடிக்கவில்லை என்று ட்ரோல் செய்கிறீர்கள். அப்படி ஏதேனும் அப்டேட் இருந்தால், அதை எங்கள் மனைவிகளிடம் சொல்வதற்கு முன்பு உங்களிடம் தான் முதலில் தெரிவிப்போம். ஏனென்றால் நீங்கள் எங்களுக்கு மிக முக்கியமானவர்கள் என்று ஜூனியர் NTR தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here