WTC புள்ளிப் பட்டியல் சரிந்த இந்தியா…, இங்கிலாந்து அணிக்கு எதிராக வீழ்ந்ததால் ஏற்பட்ட மாற்றம்!!

0
WTC புள்ளிப் பட்டியல் சரிந்த இந்தியா..., இங்கிலாந்து அணிக்கு எதிராக வீழ்ந்ததால் ஏற்பட்ட மாற்றம்!!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் 3 வது சீசன் (2023-2025) கடந்த ஆண்டு ஜூன் 16 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சர்வதேச அளவிலான 9 அணிகள் பங்கு பெற்றுள்ள இந்த தொடரில், அனைத்து அணிகளும் தங்களது ஆரம்ப நிலை போட்டிகளில் விளையாடி உள்ளன. அந்த வகையில், சர்வதேச இந்திய அணியானது தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் மாற்றம் அடைந்துள்ளது. அதாவது, 43.33%த்துடன் இந்தியா 5 வது இடத்தை பிடித்துள்ளது. இந்த புள்ளிப் பட்டியலில் ஆஸ்திரேலியா 55%, தென் ஆப்பிரிக்கா 50%, நியூசிலாந்து 50%, பங்களாதேஷ் 50%-த்துடன் முதல் 4 இடங்களில் உள்ளனர். மேலும், பாகிஸ்தான் 36.66%, வெஸ்ட் இண்டீஸ் 33.33%, இங்கிலாந்து 29.16%, இலங்கை புள்ளிகள் எதுவும் இன்றியும் கடைசி 4 இடங்களை பிடித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here