WPL 2023: ஹாட்ரிக் சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ் ஸ்டார்…, UP W-யை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்து அபாரம்!!

0
WPL 2023: ஹாட்ரிக் சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ் ஸ்டார்..., UP W-யை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்து அபாரம்!!
WPL 2023: ஹாட்ரிக் சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ் ஸ்டார்..., UP W-யை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்து அபாரம்!!

UP வாரியர்ஸ் அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணியானது, WPL தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

WPL:

இந்தியாவில் மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் தற்போது இறுதிப் போட்டியை எதிர்நோக்கி உள்ளது. இந்த தொடருக்கான, லீக் போட்டிகளின் முடிவில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது அதிக புள்ளிகள் பெற்று, நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து, மும்பை இந்தியன்ஸ் மற்றும் UP வாரியர்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று பிளே ஆப் சுற்று நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பதால், போட்டியானது விறுவிறுப்பாக நடைபெற்றது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதில், டாஸ் வென்ற UP வாரியர்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டு இழப்புக்கு 182 ரன்களை குவித்திருந்தது. இதில், அதிகபட்சமாக நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் 72* ரன்கள் எடுத்து அசத்தி இருந்தார். இதன் தொடர்ச்சியாக 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் UP வாரியர்ஸ் அணி களமிறங்கியது.

ஏங்கி கிடக்கும் இளசுகளுக்கு தங்க மேனி காட்டி தரமான தரிசனம் கொடுத்த சமந்தா! அந்த அழகை பார்த்து பூரித்து போன ரசிகர்கள்!!

இந்த போட்டியில், நிதானமாக விளையாடிய UP வாரியர்ஸ் அணியில், கிரண் நவ்கிரே 43, சிம்ரன் ஷேக் 0, சோஃபி எக்லெஸ்டோன் 0 என இஸ்ய் வோங் பந்து வீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதன் மூலம், இஸ்ய் வோங் இந்த WPL தொடரில் முதல் ஹாட்ரிக் சாதனை படைத்தார். இந்த போட்டியில் UP வாரியர்ஸ் அணி, எதிரணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், 17.4 ஓவரில் 110 ரன்களுக்குள் சுருண்டது. இதன் விளைவால், மும்பை இந்தியன்ஸ் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here