ஐபிஎல் 2023ல் புகுத்தி உள்ள புதுமைகள் என்னென்ன?? போட்டிகளை எதில் பார்க்கலாம்?? முழு விவரம் உள்ளே!!

0
ஐபிஎல் 2023ல் புகுத்தி உள்ள புதுமைகள் என்னென்ன?? போட்டிகளை எதில் பார்க்கலாம்?? முழு விவரம் உள்ளே!!
ஐபிஎல் 2023ல் புகுத்தி உள்ள புதுமைகள் என்னென்ன?? போட்டிகளை எதில் பார்க்கலாம்?? முழு விவரம் உள்ளே!!

ஐபிஎல் 2023 ம் ஆண்டிற்கான , போட்டிகளில் புது விதி முதல் அதனை ஒளிப்பரப்பும் ஊடகம் வரை பல புதிய ஏற்பாடுகளை செய்து வருகிறது. இது குறித்த முழு விவரத்தையும் இப்பதிவில் காணலாம்.

ஐபிஎல்:

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் எதிர்பார்ப்பு, இந்திய ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதற்கு ஏற்றாற்போல, ஐபிஎல் தொடர்பான புதுப்புது அப்டேட்களும் ஒவ்வொரு நாளும் வெளியாகி வருகின்றன. இந்த ஐபிஎல் தொடர், இந்தியாவில் உள்ள நகரங்களை மையமாக கொண்டு மார்ச் 31ம் தேதி முதல் மே 28ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்நிலையில், இந்த ஐபிஎல் 2023ல் புகுத்தி உள்ள புதுமையான அப்டேட்கள் குறித்து இப்பதிவில் காணலாம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

  • ஐபிஎல் 2023 ஆனது, கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு, முழுவதுமாக இந்தியாவில் நடைபெற இருக்கிறது.
  • இந்த தொடரில், 10 அணிகள், முதல் முறையாக இரண்டு குரூப்களின் கீழ் தலா 5 அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டி போட உள்ளனர்.

குரூப் A: DC, KKR, LSG, MI மற்றும் RR

குரூப் B: CSK, GT, PBKS, RCB மற்றும் SRH

WPL 2023: ஹாட்ரிக் சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ் ஸ்டார்…, UP W-யை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்து அபாரம்!!

ஐபிஎல் 2023ல், புதிய விதிமுறைகளும் புகுத்தி உள்ளன.

  • இம்பாக்ட் பிளேயர் வீதி: கால்பந்து போட்டியில் உள்ளவாறு, போட்டியின் நடுவே, ஒரு வீரரை வெளியேற்றி மாற்று வீரரை பயன்படுத்திக்கொள்ளலாம். அதுவும் அந்த மாற்று வீரர் இந்திய வீரராக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
  • டாஸ் போட்ட பின்பு அதற்கு ஏற்றார் போல், பிளேயிங் லெவனை அறிவிக்கலாம். உள்ளிட்ட பல விதிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
  • டெல்லி அணிக்கு புது கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஐபிஎல் ஒளிபரப்பு ஊடகங்களான, Viacom18 (Sports 18), Disney+ Hotstar, ஜியோ டிஜிட்டல் உள்ளிட்டவைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
  • இதில் ஜியோ, ரசிகர்கள் விரும்பும் படி, பல கோணங்களில் போட்டியை கண்டு களிக்க ஏற்பாடுகளை செய்து வருகிறது.
  • இதற்க்கான பல திட்டங்களையும் ஜியோ நிறுவனம் விரைவில் அறிவிக்க உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here