T20 உலக கோப்பைக்கு தயாராகும் இந்தியா…, பங்களாதேஷிற்கு எதிராக இன்று கடைசி ஆட்டம்!!

0
T20 உலக கோப்பைக்கு தயாராகும் இந்தியா..., பங்களாதேஷிற்கு எதிராக இன்று கடைசி ஆட்டம்!!
T20 உலக கோப்பைக்கு தயாராகும் இந்தியா..., பங்களாதேஷிற்கு எதிராக இன்று கடைசி ஆட்டம்!!

இந்திய மகளிர் அணி டி20 உலக கோப்பைக்கு முன், இன்று பங்களாதேஷ் அணியை பயிற்சி ஆட்டத்தில் எதிர்கொள்ள தயாராகி வருகிறது.

டி20 உலக கோப்பை:

ஐசிசி சார்பாக மகளிருக்கான டி20 உலக கோப்பை தொடரின் 8 வது சீசன் வரும் 10ம் தேதி முதல் தென் ஆப்பிரிக்காவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடரில், இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் இரு குரூப்களாக பிரிக்கப்பட்டு, முதலில் லீக் சுற்றுகள் போல் போட்டியிட உள்ளன. சமீபத்தில் நடந்து முடிந்த மகளிருக்கான U19 டி20 உலக கோப்பை தொடரின் முதல் சீசனை ஷஃபாலி வர்மா தலைமையிலான இந்திய அணி வென்று வரலாறு படைத்திருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதே போல, ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான சீனியர் இந்திய அணியும் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரை வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில், சர்வதேச 10 அணிகளும் தலா 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகிறது. இதன்படி, இந்திய அணி தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்து பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்தியா, ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி., ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் புதிய திட்டம்!!!

இதையடுத்து, இன்று பங்களாதேஷிற்கு எதிராக, தனது 2வது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், கூடுதல் நம்பிக்கையுடன் உலக கோப்பை போட்டியில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உலக கோப்பைக்கு முன் இந்திய அணி விளையாட உள்ள கடைசி போட்டி இதுவாகும். வரும் 12ம் தேதி இந்திய அணி உலக கோப்பைக்கான முதல் போட்டியில், பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here