மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு தாமதமாவது ஏன்?? காரணம் இது தான்.., வெளியான முக்கிய தகவல்!!!

0
மக்களவைத் தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தேர்தலுக்கான அறிவிப்பு வரும் 15-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது மேலும் நீட்டிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதற்கான காரணம் என்னவென்றால் தேர்தல் ஆணையர்கள் நியமனம் குறித்து மார்ச் 15-ல் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். இதன் காரணமாக தேர்தல் தேதி அறிவிக்க தாமதமாவதாக தெரிவித்துள்ளனர். மேலும் வரும் மார்ச் இறுதி வாரத்திற்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும், முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 2வது வாரத்திலும், தமிழ்நாட்டில் மே மாதத்திலும் நடைபெறும்.
இந்த சூழலில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதாப் “என் வாக்கு என் உரிமை” என்ற நிகழ்ச்சியில் எல்லா மாணவர்களும் வாக்கு செலுத்த வேண்டும். மேலும் மாணவர்கள் அனைத்து இடங்களிலும் மக்களுக்கு வாக்கு செலுத்துவதின் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இது தவிர இந்தியாவில் ஆண்கள் பெண்கள் என அனைவருக்கும் வாக்கு செலுத்த சம உரிமை உள்ளது. ஆனாலும் தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 52 சதவிகித பெண்கள் வாக்கு செலுத்துவதாக தெரிவித்துள்ளனர். இவரைத் தொடர்ந்து பேசிய தேர்தல் ஆணையர் கோபாலசாமி நீங்கள் ஓட்டு போட தேர்ந்தெடுக்கும் நபரை பற்றிய பின்புலமும் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். மேலும் அவர்களின் மீது என்னென்ன புகார்கள் உள்ளது என்பது குறித்தும் ஆராய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here