வாட்ஸ் அப்பில் வந்த இதுவரை இல்லாத அப்டேட் – இனி ஒரு நொடி போதும் இதை பண்ண! உடனே பாருங்க!!

0

வாட்ஸ் அப்பில் இதுவரை இல்லாத, புத்தம் புதிய அப்டேட் ஒன்றை மெட்டா நிர்வாகம் அதிரடியாக வெளியிட்டுள்ளது. இதனால் பயனர்கள் குஷி அடைந்துள்ளனர்.

புதிய அப்டேட்:

உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்று வாட்ஸ்அப். இந்த வாட்ஸ் அப்பின் மெட்டா நிறுவனம் தங்கள் பயனர்களுக்கு நாள்தோறும் புதிய பல அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் எமோஞ்சி, மெசேஜ்களை டெலிட் செய்யும் நேரம் அதிகரிப்பு உள்ளிட்ட பல அப்டேட்களை வெளியிட்டது. அந்த வகையில் தற்போது, பயனர், தனிப்பட்ட ஒருவர் அனுப்பிய மெசேஜை படிக்க, அவரது சாட்டில் இருக்கும் மொத்த மெசேஜையும் தேட வேண்டும்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஆனால் இனி அப்படி இல்லாமல், வாட்ஸ்அப் புதிதாக வெளியிட உள்ள காலண்டர் ஐகானை பயன்படுத்தி, நாம் தேடும் மெசேஜை உடனே எடுக்கலாம். அந்த காலண்டர் ஐகானை கிளிக் செய்து, மெசேஜ் வந்த தேதியை குறிப்பிட்டால் அந்த நாளின் அனைத்து சாட் பகுதியும் உங்கள் முன் தோன்றும். அதில் நீங்கள் விரும்பும் மெசேஜை படித்து விட்டு அந்த காலண்டர் ஐகானை, வேண்டாம் எனக்கு கிளிக் செய்தால் அது மறைந்து விடும். இந்த அப்டேட் whatsapp பயனர்களுக்கு, விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here