திரையுலகில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சாய் பல்லவி.., பெரிய ஆள் தான் போங்க.., ரசிகர்கள் வாழ்த்துமழை!!

0

திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சாய் பல்லவி தற்போது மீண்டும் ஒரு சாதனையை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை சாய் பல்லவி:

சின்னத்திரையில் டான்சராக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் தான் நடிகை சாய் பல்லவி. இவர் கடந்த 2015ம் ஆண்டு வெளியான பிரேமம் திரைப்படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்தவர். கடைசியில் வெளியான லவ் ஸ்டோரி, விராட பருவம், கார்கி, ஷியாம் சிங்கா ராய் போன்ற படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன.

இந்த வெற்றியால் இவரின் மார்க்கெட் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் ரசிகர்கள் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்து வருகின்றனர்.இந்நிலையில் கடந்த ஆண்டு இயக்குனர் ராகுல் சன்கிரித்யன் இயக்கத்தில் நானி, சாய் பல்லவி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஷாம் சிங்காராய். இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என பான் இந்திய படமாக வெளியானது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

மேலும் பெண்களின் அடிமைத்தனத்தை போக்கும் விதமாக கதை அமைந்ததால், ரசிகர்கள் மத்தியில் இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி சாய் பல்லவி என்றாலே அவரது நடனமே எல்லோருக்கும் ஞாபகம் வரும். அந்த வகையில் இப்படத்திலும் பாரம்பரிய நடனம் ஆடியுள்ளார். இந்நிலையில் ஷியாம் சிங்கா ராய் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகியுள்ளது. நடிகை சாய் பல்லவிக்கு ஆஸ்கர் கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த செய்தியால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here