T20 உலக கோப்பைக்கு பிறகு விராட் கோலி ஓய்வு..? – விமர்சிக்கும் பாகிஸ்தான் வீரர்!!

0

சர்வதேச தொடர்களின் முன்னாள் கேப்டனான விராட் கோலி T20 உலக கோப்பைக்கு பிறகு ஓய்வை அறிவிக்க உள்ளதால், அவரின் முடிவு குறித்து பாகிஸ்தான் வீரர் நெகிழ்ச்சியான கருத்தை பதிவிட்டுள்ளார்.

அஃப்ரிடி கூறிய கருத்து!!

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ஆசிய கோப்பை தொடரில் அருமையான கம்பேக் கொடுத்து அசத்தி வருகிறார். ஆசிய கோப்பை தொடரில் சதம் அடித்து தன் மீது வைத்த அனைத்து விமர்சனத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்நிலையில் BCCI அவர் ஓய்வு குறித்து முக்கிய முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 33 வயதாகும் விராட் கோலி ஏற்கனவே அதிகமான போட்டிகளில் விளையாடியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால் இனிமேல் அவரால் மூன்று வடிவ ஃபார்மெட்டிலும் தொடர்ந்து விளையாடுவது சிரமமான விஷயம் தான். இதனால் T20 உலக கோப்பை தொடருக்கு பிறகு விராட் கோலிக்கு T20 ஃபார்மெட்டில் இருந்து ஒய்வு அளிக்க BCCI முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இதனால் அவரின் ஓய்வு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு T20 உலக கோப்பைக்கு பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் வீரரான அப்ரிடி விராட் கோலி பற்றி சில நெகிழ்ச்சியான விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதாவது விராட் கோலி கடந்த மூன்று வருடங்களாக மோசமான பார்மில் விளையாடி வந்த போது ஓய்வு பெறுவதற்கான முடிவை எடுத்திருந்தால் அது சரியானதாக அமைத்திருக்காது. ஆனால் இதுபோன்று இல்லாமல், விராட் கோலி தனக்கே உரிய பார்மை நிரூபித்து விட்டு அதிரடியான ஆட்டத்துடன் ஓய்வு பெறுவது தான் அவருக்கு அழகு என்றும், அப்படி செய்வதன் மூலம் அவரது புகழ் இன்னும் உச்சிக்கு செல்லும் என அஃப்ரிடி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here