விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்: மத்திய அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்றுவதாக உறுதி – அமைச்சர் தகவல்!!

0

தமிழகத்தில் மத்திய அரசு அறிவித்துள்ள  வழிகாட்டு நெறிமுறைகள் படியே விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

பண்டிகைக்கு கட்டுப்பாடுகள்:

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட கூடுதல் தளர்வுகளில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை பொது இடத்தில் சிலை வைத்து கொண்டாட தடை விதிக்கப்படுவதாக அரசு அறிவித்து இருந்தது.   மேலும், பொது மக்கள் ஒரே நேரத்தில் சமூக இடைவெளியின்றி கூட்டமாக கூட அனுமதி மறுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.  குறிப்பாகச் சொல்லப்போனால், முற்றிலும் பொது இடத்தில் பண்டிகையை கொண்டாட அனுமதி இல்லை என அரசு திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.

இதனை அடுத்து,  மக்கள் தங்கள் வீடுகளில் சிலைகளை வாங்கி வந்து வைத்து, பண்டிகையை கொண்டாடி தங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள நீர்நிலைகளில் சிலைகளை கரைத்து கொள்ளுமாறு அறிவுரை வழங்கியது.  இந்த அறிவிப்பு, ஏற்க கூடியதாக இல்லை என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்  கருத்து தெரிவித்து இருந்தனர்.  எனவே, இதனை ரத்து செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன் வைத்தனர்.

மேலும், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற பாஜக எம்எல்ஏ எம் ஆர் காந்தியின் கேள்விக்கு பதில் அளித்த மாநில அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்ததாவது, மத்திய அரசு வெளியிட்டுள்ள நிலையான தடுப்பு நடவடிக்கைகளை கொண்டு மாநில அரசு பண்டிகைக்கான கட்டுப்பாடுகளை விதித்து வருவதாக தெரிவித்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here