அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி? – வெளியான தகவல்!!

0

செப்டம்பர் மாத இறுதியில் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வரும் செப்டம்பர் மாதம் 23 மற்றும் 24 ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் கூறப்பட்டு வருகின்றது.

மீண்டும் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம்:

நரேந்திர மோடி பிஜேபி கட்சி பின்னணியில் இருந்து வந்து குஜராத் மாநிலத்தின் முதல்வர் பொறுப்பினில் இருந்து வந்தவர். கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவிப் பொறுப்பினை ஏற்றார். அதனை தொடர்ந்து மக்களுக்காக  பல  நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

அத்திட்டங்களால் மக்கள் பயன் பெற்றார்கள். இதனால் இவர்  மீண்டும் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பினை பெற்று  பிரதமராக பதவி வகித்து வருகிறார். மேலும் அண்டைய நாடுகளுடன் நட்புடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பலநாடுகளுக்கு சென்று வந்தார். இவர் இதுவரை 96 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் 2014, 2015, 2016, 2017, 2018 ஆம் ஆண்டுகளில் முறையே 9,23,17,14,23 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அதனை தொடர்ந்து மீண்டும் 2019 ஆம் ஆண்டில் 15 வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். 2020 ஆம் ஆண்டு கொரோனாவின் காரணமாக பயணத்தை புறக்கணித்த பிரதமர் தற்போது அமெரிக்கா செல்ல உள்ளதாக பயணம் வெளியாகியுள்ளது.

ஆனால் இன்னும் இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. மேலும் மோடி பயணத்தை மேற்கொண்டால் வரும் 23மற்றும் 24 ஆம் தேதிகளில் செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போதைய அமெரிக்காவின் அதிபரான  ஜோ பைடனுடன் இது முதலாவது சந்திப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here