எனக்கும் என்னோட ஜோடிக்கும் ராசி இல்லை – கணவரை நினைத்து புலம்பும் கமலின் விக்ரம் பட நடிகை!!

0
எனக்கும் என்னோட ஜோடிக்கும் ராசி இல்லை - கணவரை நினைத்து புலம்பும் கமலின் விக்ரம் பட நடிகை!!
எனக்கும் என்னோட ஜோடிக்கும் ராசி இல்லை - கணவரை நினைத்து புலம்பும் கமலின் விக்ரம் பட நடிகை!!
விக்ரம் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை காயத்ரி, தனக்கும் கணவருக்கும் ராசியில்லை என சமூக வலைத்தளங்களில் போட்ட பதிவு பயங்கரமாக வைரலாகியுள்ளது.

வைரல் பதிவு :

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காயத்ரி. இவர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். மணப்பெண்ணாக தன் அருகில் இருக்கும், இவரைப் பார்த்து விஜய் சேதுபதி “ப்பா” என்று சொல்லிய வசனம், பெரிய அளவில் பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி தனது பாலினத்தை மாற்றிக் கொள்வார் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

தொடர்ந்து தற்போது, விக்ரம் படத்தில் காயத்ரி நடித்துள்ளார். இந்த படத்தில், காயத்ரி கணவர் என்ன வேலை செய்கிறார் என்பது அவருக்கே தெரியாது. இது போன்ற படங்களில் தனது கதாபாத்திரத்தை சுட்டிக்காட்டி, எனக்கும் கணவர்களுக்கும் ராசி இல்லை என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். இந்த காமெடி பதிவு தற்போது, சோசியல் மீடியாவில் பயங்கரமாக வைரல் ஆகியுள்ளது. தொடர்ந்து தற்போது காயத்ரி மாமனிதன், இடிமுழக்கம், பஹீரா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here