கோபியை எடுபிடியாக்கிய ராதிகா.,பாக்கியாவை பக்காவா தயார் செய்யும் எழில் – சூடுபிடிக்கும் சீரியல்!!

0
கோபியை எடுபிடியாக்கிய ராதிகா.,பாக்கியாவை பக்காவா தயார் செய்யும் எழில் - சூடுபிடிக்கும் சீரியல்!!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ராதிகாவிடம் நாளுக்கு நாள் சிக்கி சீரழிகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியல் இன்று, ஜாக்கிங் போயிட்டு வந்த கோபி ராதிகாவை உற்று உற்றுப் பார்க்கிறார், அப்போது அவர் என்ன கோபி இப்படி பாக்குறீங்க, நான் அவளோ அழகா இருக்கேனா என கேட்க இல்லை எனக்கு காபி வேண்டும் என சொல்கிறார் கோபி. அதற்கு ராதிகா அப்போ நான் அழகா இல்லையா என கோபியிடம் கேட்க, நோ நோ ரொம்ப அழகா இருக்க என சொல்கிறார். இதையடுத்து கோபி, எனக்கு நீ சாப்பாடு கொடுக்க விட்டாலும் பரவாயில்லை, மார்னிங் அண்ட் நைட் காபி வேண்டும் என ராதிகாவிடம் கேட்க, அதற்கு ஏன் இப்படி கெஞ்சுறீங்க நான் போட்டு தரேன் பால் பாக்கெட் வாங்கிட்டு வாங்க என சொல்கிறார் ராதிகா.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதையடுத்து கோபி பால் பாக்கெட் வாங்கி கொண்டு வரும்போது அவருடைய அப்பா ராமமூர்த்தி கண்ணில் பட்டு விட்டார், அப்போது ராமமூர்த்தி, அவரது மகனை பார்த்து கேலி கிண்டல் செய்தார்.அதுக்கு கோபி ஏன் வீட்டுக்கு நான் பால் வாங்கிட்டு போறேன், உங்களுக்கு என்ன வந்துச்சு என்று சமாளித்து விட்டு போய்விட்டார். இதற்கிடையில் எழில், பாக்கியாவிற்கு ஆன்லைனில் எப்படி பணம் அனுப்புவது எப்படி என்பதை சொல்லிக் கொடுக்கிறார்

நடிகர் சரத்குமார் 2ம் தாரத்தின் மாமியாரை பார்த்து உள்ளீர்களா? தீயாய் பரவும் வைரல் போட்டோ!!

மறுபக்கம், பால் பாக்கெட் வாங்கிக்கொண்டு வீட்டில் கோபி நுழையும் போது, ராதிகா மயூவை ஸ்கூலுக்கு கிளப்பி கொண்டிருந்தார். அப்போ இன்னைக்கு நமக்கு காபி கிடைச்ச மாதிரி தான் என புலம்பி கொண்டு கோபி ஆபீசுக்கு கிளம்பி போய்விட்டார். இதற்கிடையில் ராதிகா காபியுடன் வந்தார், அதை பார்த்த கோபி சந்தோஷத்துடன் காபியை குடித்துவிட்டு, டிபன் சாப்பிட போகும் போது உப்புமாவா ? என சாப்பாடை பார்த்து ஷாக் ஆகிவிட்டர். அய்யோ இதெல்லாம் எனக்கு பிடிக்காதே என புலம்பி கொண்டு உப்புமாவை சாப்பிட தொடங்கினார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here