T20 WC 2022: முதலிடத்தை பிடிக்க போவது யார்?? நியூசிலாந்துக்கு எதிராக இலங்கை இன்று பலப்பரீட்சை!!

0
T20 WC 2022: முதலிடத்தை பிடிக்க போவது யார்?? நியூசிலாந்துக்கு எதிராக இலங்கை இன்று பலப்பரீட்சை!!
T20 WC 2022: முதலிடத்தை பிடிக்க போவது யார்?? நியூசிலாந்துக்கு எதிராக இலங்கை இன்று பலப்பரீட்சை!!

நியூசிலாந்து அணிக்கு எதிராக டி20 உலக கோப்பையில் இலங்கை அணி இன்று சிட்னி மைதானத்தில் பலப்பரீட்சை செய்யவுள்ளது.

டி20 உலக கோப்பை 2022:

டி20 உலக கோப்பை தொடரின் எட்டாவது சீசன் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், குரூப் 1ல் நேற்று நடைபெற இருந்த ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் கை விடப்பட்டிருந்தது. இதனால், இந்த 4 அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கொடுக்கப்பட்டது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதையடுத்து, நியூசிலாந்து, இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா தலா 3 புள்ளிகளுடன், குரூப் 1 பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்துள்ளன. இதனை தொடர்ந்து, இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணி தலா 2 புள்ளிகளுடன் அடுத்த இரண்டு இடங்களில் உள்ளன. இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிராக இலங்கை அணி இன்று சிட்னி மைதானத்தில் போட்டியிட உள்ளது.

CSK ட்விட்டுக்கு பதிலளித்த சுரேஷ் ரெய்னா.., வெளிவந்த ரகசியத்தால் ஷாக் ஆன ரசிகர்கள்!!

இன்றைய போட்டியில், இலங்கை அணி வெற்றி பெற்றால் 4 புள்ளிகளுடன் முதலிடத்தை எட்டி பிடிக்கும். நியூசிலாந்து அணி வென்றால் 5 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்து அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பிரகாசமாகி கொள்ளும். இரு அணிகளும் முதலிடத்தை தனதாக்கி கொள்ள இன்று கடுமையாக போட்டி போட்டு கொள்ள கூடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here