தவிக்கிறேன்.., ரொம்ப வலிக்கிறது.., மகளை நினைத்து உருகிய விஜய் ஆண்டனி மனைவி.., எமோஷனல் பதிவு வைரல்!!

0
மகளை நினைத்து உருகிய விஜய் ஆண்டனி மனைவி

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வரும் விஜய் ஆண்டனி, தற்போது ஹீரோவாக அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி இவர் இயக்குனராகவும் அறிமுகமாகி பிச்சைக்காரன் 2 படத்தை எடுத்தார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியாக சக்க போடு போட்டது என்று தான் சொல்ல வேண்டும். இதனை தொடர்ந்து வரிசையாக படங்களில் நடித்து வரும் விஜய் ஆண்டனி மூத்த மகள் மீரா, கடந்த செப்டம்பர் மாதம் 19ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரின் இழப்பை  தாங்க முடியாமல் தற்போது வரை அவருடைய குடும்பத்தினர் கவலையில் இருந்து வரும் நிலையில்,தற்போது விஜய் ஆண்டனி மனைவி பாத்திமா எமோஷனல் பதிவை வெளியிட்டுள்ளார்.  அதில் இந்த உலகம் உனக்கானதில்லை. வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் இடையே இருக்கும் concept புரியாமல்  நான்  தவிக்கிறேன். “ரொம்ப வலிக்குது… God will help me , he should” என அவர் பதிவிட்டு இருக்கிறார்.

PKL 2023: கடுமையாக போராடிய தமிழ் தலைவாஸ்…, இறுதி நிமிடத்தில் சொதப்பிய டபாங் டெல்லி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here