முக்கிய இடத்திற்கு சென்று திருமண வேண்டுதலை வைத்த விக்னேஷ் சிவன் – நயன்தாரா – எங்கன்னு பாருங்க!!

0
முக்கிய இடத்திற்கு சென்று திருமண வேண்டுதலை வைத்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா - எங்கன்னு பாருங்க!!

காத்து வாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பை முடித்த கையோடு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சோட்டாணிக்கரையில் அமைத்துள்ள பகவதி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

சுவாமி தரிசனம் செய்த நயன்தாரா:

கடந்த 2015 ஆம் ஆண்டில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா ”நானும் ரவுடி தான்” என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலமாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் மீது காதல் வசப்பட்டார். கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து திரைப்படங்களையும் தயாரிக்க ஆரம்பித்து விட்டனர்.

ஏற்கனவே இவர்கள் தயாரிப்பில் வெளியான ராக்கி திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இறுதியாக நயன்தாராவை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை இயக்கியுள்ளார் விக்னேஷ் சிவன். இருவரும் எப்போது தான் திருமணம் செய்து கொள்வீர்கள் என்பது தான் ரசிகர்கள் பலரின் கேள்வியாக உள்ளது.

தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் பட வேலைகளை முடித்தவுடன் சோட்டாணிக்கரையில் அமைத்துள்ள பகவதி அம்மன் கோவிலில் இருவரும் தரிசனம் செய்துள்ளனர். இவர்கள் தரிசனம் செய்ய சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here