பொது இடத்தில் எச்சில் துப்புவது, குப்பை கொட்டுவதை செய்தால் இனி இதான் கதி., அரசு வார்னிங்!!

0
பொது இடத்தில் எச்சில் துப்புவது, குப்பை கொட்டுவதை செய்தால் இனி இதான் கதி., அரசு வார்னிங்!!
பொது இடத்தில் எச்சில் துப்புவது, குப்பை கொட்டுவதை செய்தால் இனி இதான் கதி., அரசு வார்னிங்!!

பொது இடத்தில் சிறுநீர் கழித்தல், எச்சில் துப்புதல் மற்றும் குப்பை கொட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால், நிச்சயம் அபராதம் விதிக்கப்படும் என உத்தர பிரதேச அரசு அறிவித்துள்ளது.

அரசு உறுதி:

தூய்மை இந்தியா என்ற திட்டத்தின் கீழ் மக்களுக்கு தூய்மை குறித்த விழிப்புணர்வை மத்திய அரசு ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், பொது இடங்களில் எச்சில் துப்புவது, குப்பை கொட்டுவது மற்றும் சிறுநீர் கழிப்பது போன்ற அநாகரிக செயல்களில் ஈடுபட்டால் அபராதம் விதிக்கப்படும் என உத்தர பிரதேச அரசு அறிவித்துள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

முதல் கட்டமாக லக்னோ மற்றும் ஆக்ரா பகுதிகளில் மட்டும், அமலில் இருந்த இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள் இத்தவறை செய்தால் நகர்ப்புறங்களில் ரூபாய் 250 ம், நகரின் உள்ப்புறங்களில் ரூபாய் 150 ம், நகராட்சி பகுதிகளில் ரூபாய் 100ம், நகர்ப்புற பஞ்சாயத்து பகுதிகளில் ரூபாய் 50-ம் அபராதம் விதிக்கப்படும் என உத்தர பிரதேச அரசு அறிவித்துள்ளது.

தொடர்ந்து கெரியரில் அடி வாங்கும் சிவகார்த்திகேயன்., புது படத்துக்கு வந்த சோதனை! ஆதங்கத்தில் ரசிகர்கள்!!

இதே போல் பொது இடத்தில் எச்சில் துப்பினாலோ அல்லது குப்பை கொட்டினாலோ அந்த இடத்திலேயே அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இத்திட்டத்திற்கு சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here