தயாராகும் மின்சார வாரியங்கள் – நாளை இரவு 9 மணி முதல் 9 நிமிடம் மின் அணைப்பு.!

0

கொரோனா தாக்கத்தால் நாடெங்கிலும்மக்கள் பீதியில் உள்ளனர் . கொரோனா தொடர்பாக மன் கீ பாத் உரை அல்லாமல் நேற்று மூன்றாவது முறையாக நாட்டு மக்கள் முன்பு பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார். அப்போது அவர் கூறுகையில் ஊரடங்கை கடைப்பிடிப்பதில் நாம் முன்னுதாரணமாக இருந்து வருகிறோம். கொரோனாவுக்குஎதிராக யுத்தம் நடத்தியதற்கு நன்றி என்று தெரிவித்தார்.

மின்சார வாரியம் தயார்:

உலக நாடுகள் நம்மை பார்த்து வியந்து நம்மை போல் ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. கொரோனா எனும் இருளுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நாளை இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் அனைத்து விளக்குகளையும் அணைத்து வைக்க வேண்டும். அதற்கு பதிலாக மெழுகுவர்த்தி, அகல் தீபம் ஏற்றி வைக்கலாம். செல்போன், டார்ச்லைட்டுகளில் வெளிச்சம் ஏற்படுத்துங்கள் என மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியாவில் 3000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு – அதிலும் ஒரு குட் நியூஸ்..!

Can electricity be an option for clean cooking in developing ...

இது போல் ஒரே நேரத்தில் 130 கோடி இந்தியர்களும் மின் விளக்குகளை அணைத்துவிட்டு பின்னர் ஒரே நேரத்தில் அவற்றை ஆன் செய்து மின்சார வாரியத்திற்கு சவாலான காரியம் ஆகும். இதற்காக தமிழக மின்சார வாரியம் சில தயார் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி அனைத்து செயற்பொறியாளர்களும் நாளை இரவு பணியில் இருக்க வேண்டும்.

Electrical Substation Installation Service, In Telangana | ID ...

சரியாக 9 மணிக்கு மின்சாரம் சரியான அளவில் கிடைக்க வேண்டும். அது போல் 9 நிமிடங்கள் கழித்து அனைவரும் மின்விளக்குகளை எரிய விடும் போது அதிக அளவில் மின் நுகர்வு ஒரே நேரத்தில் ஏற்படும் என்பதால் அதை செய்ய மின் மாற்றிகளை தயார் நிலையில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here