தமிழகத்தில் தொடர்ந்து சரியும் சின்ன வெங்காயத்தின் விலை…, ஒரு கிலோவே இவ்வளவு தானா?? முழு நிலவரம் உள்ளே!! 

0
தமிழகத்தில் தொடர்ந்து சரியும் சின்ன வெங்காயத்தின் விலை..., ஒரு கிலோவே இவ்வளவு தானா?? முழு நிலவரம் உள்ளே!! 
தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் முழுவதும் கனமழை, புயல் என மாறி மாறி வெளுத்து வாங்கியது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் காய்கறிகளின் விளைச்சலும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளானது. இதன் காரணமாக, சின்ன வெங்காயத்தின் வரத்து குறைய தொடங்கியதை அடுத்து, அதன் ஒரு கிலோ விலையோ ரூ. 120க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சின்ன வெங்காயம் உட்பட காய்கறிகளின் விளைச்சல் சற்று அதிகரிக்க அதன் விலையும் சரிவர குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (ஜனவரி 23) விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை குறித்து பின்வருமாறு காணலாம்.
காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 40
தக்காளி 30
பெரிய வெங்காயம் 25
பூண்டு 180
இஞ்சி 140
பீன்ஸ் 40
பீட்ரூட் 45
கேரட் 65
உருளைக்கிழங்கு 33
தேங்காய் 25
வெண்டைக்காய் 50
அவரைக்காய் 70
கத்தரிக்காய் 15

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here