தமிழக பள்ளி மாணவர்களே…, 2024 ஆம் ஆண்டின் அதிகாரப்பூர்வ விடுமுறை பட்டியல் வெளியீடு!!

0
நாடு முழுவதும் 2023-2024 ஆம் கல்வி ஆண்டு இறுதிக் கட்டத்தை எதிர்நோக்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பள்ளி மாணவர்களை மகிழ்விக்கும் வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த அரசு விடுமுறை தினங்கள் அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்லாமல், அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். இந்த விடுமுறை பட்டியலின் படி, 2024 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை மொத்தம் 24 நாட்கள் அரசு விடுமுறை தினங்கள் உள்ளன.

2024 ஆம் ஆண்டின் அரசு விடுமுறை தினங்களுக்கான பட்டியல் பின்வருமாறு:

ஜனவரி மாதம்:

ஜனவரி 1, 2024 (திங்கட்கிழமை) புத்தாண்டு தினம்

ஜனவரி 15, 2024 – திங்கட்கிழமை – பொங்கல்

ஜனவரி 16, 2024 – செவ்வாய் கிழமை   – திருவள்ளுவர் தினம்

ஜனவரி 17, 2024 – புதன்கிழமை   – உழவர் திருநாள்

ஜனவரி 25, 2024 – வியாழக்கிழமை   – தைப்பூசம்

ஜனவரி 26, 2024 – வெள்ளிக்கிழமை   -குடியரசு தினம்

பிப்ரவரி மாதம்:

அரசு விடுமுறைகள் எதுவும் இல்லை.

மார்ச் மாதம்:

மார்ச் 29, 2024 – வெள்ளிக்கிழமை   – புனித வெள்ளி

ஏப்ரல் மாதம்:

ஏப்ரல் 9, 2024 – செவ்வாய் கிழமை   -தெலுங்கு புத்தாண்டு தினம்

ஏப்ரல் 11, 2024 – வியாழக்கிழமை   – ரம்ஜான் (இதுல் பித்ர்)

ஏப்ரல் 14, 2024 – ஞாயிற்றுக்கிழமை – தமிழ் புத்தாண்டு தினம் மற்றும் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் பிறந்தநாள்

ஏப்ரல் 21, 2024 – ஞாயிற்றுக்கிழமை – மகாவீர் ஜெயந்தி

மே மாதம்:

மே 1, 2024 –  புதன்கிழமை – மே தினம்

ஜூன் மாதம்:

ஜூன் 17, 2024 -திங்கட்கிழமை – பக்ரீத் (இதுல் அஜா)

ஜூலை மாதம்:

ஜூலை 17, 2024 – புதன்கிழமை  – முஹர்ரம்

ஆகஸ்ட் மாதம்:

ஆகஸ்ட் 15, 2024 –  வியாழக்கிழமை – சுதந்திர தினம்

ஆகஸ்ட் 26, 2024 – திங்கட்கிழமை – கிருஷ்ண ஜெயந்தி

செப்டம்பர் மாதம்:

செப்டம்பர் 7, 2024 – சனிக்கிழமை – விநாயகர் சதுர்த்தி

செப்டம்பர் 16, 2024 – திங்கட்கிழமை – மிலாத்-உன்-நபி

அக்டோபர் மாதம்:

அக்டோபர் 2, 2024 –  புதன்கிழமை -காந்தி ஜெயந்தி

அக்டோபர் 11, 2024 – வெள்ளிக்கிழமை – ஆயுத பூஜை

அக்டோபர் 12, 2024 – சனிக்கிழமை- விஜயதசமி

அக்டோபர் 31, 2024 – வியாழக்கிழமை  – தீபாவளி

நவம்பர் மாதம்:

அரசு விடுமுறைகள் எதுவும் இல்லை.

டிசம்பர் மாதம்:

டிசம்பர் 25, 2024 –  புதன்கிழமை  – கிறிஸ்துமஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here