ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் முறைகேடு., பயனர்களுக்கு அரசு வைத்த முக்கிய வேண்டுகோள்!!

0
ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் முறைகேடு., பயனர்களுக்கு அரசு வைத்த முக்கிய வேண்டுகோள்!!
ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் முறைகேடு., பயனர்களுக்கு அரசு வைத்த முக்கிய வேண்டுகோள்!!

ரேஷன் பொருட்களை, கள்ளச்சந்தையில் பதுக்கி விற்பனை செய்யும் சமூக விரோதிகள் குறித்த தகவல்களை பொதுமக்கள் உடனே தெரியப்படுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

அரசு அறிவிப்பு :

தமிழகத்தில் ரேஷன் பயனர்களுக்கு, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மலிவு விலையில் ரேஷன் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில நேரங்களில், ரேஷன் பொருட்களை முறையாக விநியோகம் செய்யாமல் கள்ளச் சந்தையில் பதுக்கி, சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்யப்படும் அவலம் தொடர்ந்து நடந்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதுகுறித்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, கடந்த மாதம் மட்டும் ரூபாய் 5,23,741 மதிப்புள்ள 669 குவிண்டால் அரிசி, பருப்பு,கோதுமை உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இது போக, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 33 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு 106 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரசு அலுவலர்களுக்கு செக்., வேலை முடியாமல் Office விட்டுப் போக கூடாது! காண்டான அமைச்சர்!!

இதுகுறித்து பேசிய அதிகாரிகள், இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை என்றும், இதுபோன்ற பதுக்கல் சார்ந்த விஷயம் தெரிந்தால் உடனடியாக 044-24 33 89 71 என்ற Toll free நம்பரை தொடர்பு கொண்டு, தகவல் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here