தமிழகத்தில் மீண்டும் புதிய ரேஷன் கார்டு விநியோகப் பணி., 12 மாதங்களுக்கு பிறகு தொடக்கம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் மீண்டும் புதிய ரேஷன் கார்டு விநியோகப் பணி., 12 மாதங்களுக்கு பிறகு தொடக்கம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, புதிய ரேஷன் கார்டு விநியோகிக்கும் பணி நிறுத்தப்பட்டது. தற்போது ரூ.1,000 உரிமைத் தொகை திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதால், நிறுத்தப்பட்ட புதிய ரேஷன் கார்டு பணியை மீண்டும் தொடங்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் 12 மாதங்களுக்குப் பிறகு புதிய ரேஷன் கார்டுகள் அச்சிடும் பணி தொடங்கி உள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் ஆணையர் ஹர் சஹய் மீனா முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

V சென்டிமென்ட் இல்லாத அஜித்தின் படத்தலைப்பு.. இணையத்தில் கொண்டாடும் ரசிகர்கள்!!

அதன்படி “புதிய ரேஷன் கார்டுக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியுள்ள 45,509 பேருக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அந்த செய்தியை அவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுந்செய்தியாகவும் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த செய்தி பெறப்பட்டவர்கள் அந்தந்த வழங்கல் அலுவலகங்களில், புதிய குடும்ப அட்டையை பெற்றுக் கொள்ளலாம். அப்படி கார்டு பெறுவதில் தாமதம் ஏற்பட்டாலும் கூட, அட்டை எண்ணை வைத்து ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.” என தெரிவித்துள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here