தமிழக மக்களே., மஞ்சுவிரட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறை., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

0
தமிழக மக்களே., மஞ்சுவிரட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறை., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

தமிழர்களின் கலாச்சார விளையாட்டான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ஏறு தழுவுதல் போன்ற போட்டிகள், வருகிற 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை முதல் தொடங்க உள்ளது. இதனால் அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் மஞ்சுவிரட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி,

  • மஞ்சுவிரட்டு நடத்த உரிய ஆவணங்களுடன் 30 நாட்களுக்கு முன்பே www.Jallikattu.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
  • காளைகள் வரிசைப்படுத்தும் இடம், பரிசோதனை செய்யும் இடம், காளைகள் சேகரிப்பு இடம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
  • காளைகளின் கொம்பையோ, வாலையோ பிடிக்கக் கூடாது.
  • வரைமுறையின்றி காளைகளை அவிழ்த்துவிடக் கூடாது.
  • அதேபோல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நபருக்கு ரூ.5 லட்சம் வீதம்,  20 பார்வையாளர்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு பெறும் வகையில் காப்பீடு திட்டம் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இனி இந்த பிரபல சீரியல் ஒளிபரப்பாகாது.., எண்டு கார்டு போட்டாச்சு.., அதிகாரபூர்வ தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here