தமிழகத்தில் 8 வருடங்களுக்கு பின் மின்கட்டணம் உயர்வு – முழு விவரங்கள் உள்ளே!!

0
தமிழகத்தில் உயர்த்தப்பட்ட புதிய மின் கட்டணம்  இன்று முதல் அமல் - மின்சார வாரியம் அறிவிப்பு!!

தமிழகத்தில், இன்னும் இரண்டு மாதங்களுக்குள் மின் கட்டணத்தில்  மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அதிரடி:

தமிழகத்தில் கடந்த 2011-12 ஆம் ஆண்டில் இருந்து, தற்போது மார்ச் 31ஆம் தேதி வரை மின் பகிர்மான கழகத்தின் ஒட்டுமொத்த நிதி இழப்பு 1,13,266 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த நிதி இழப்பை  சரி செய்ய தமிழகத்தின் மின் கட்டணங்களை உயர்த்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அதன்படி, 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும், இதன் மூலம் 42% நுகர்வோர் பயனடைவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதுபோக, 100 யூனிட் இலவச மின்சாரத்தை வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்தார். இது போக 200 யூனிட் மின்சாரம் பயன்படுத்துவதற்கு 27.50 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படும் என்றும், 301-400 யூனிட் பயன்படுத்துவோருக்கு 147.50 ரூபாய் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துவதற்கு 298 ரூபாய் என கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. இதுபோக ரயில்வே மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மின் கட்டணம் 65 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டணங்கள் இன்னும் 2 மாதங்களில் அமல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here