தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 2024: இன்ச் இன்ச்சா நடந்த விஷயம் இதுதான்…, முழு விவரம் உள்ளே!! 

0
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 2024: இன்ச் இன்ச்சா நடந்த விஷயம் இதுதான்..., முழு விவரம் உள்ளே!! 

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் பிப்ரவரி 12 (இன்று) நடைபெறும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி இன்று நடைபெற்ற இந்த கூட்டத் தொடரானது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, பொதுவாக சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநரது உரையுடனே தொடங்கும். அவ்வாறு தொடங்கப்பட்ட இந்த தமிழக கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர் என் ரவி 2 நிமிடமே பேசி விட்டு தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே அங்கிருந்து வெளியேறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இந்த தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் நடந்த நிகழ்வுகள்:

  • அரசு தயாரித்த உரையை கூட்டத்தொடரில் ஆளுநர் வாசிப்பது வழக்கம். ஆனால், ஆளுநர் ரவி அவர்கள் அரசு தயாரித்து கொடுத்த உரையில் தமிழ்நாடு, திராவிட மாடல், பெரியார், அம்பேத்கர், அண்ணா, சமூக நீதி, சுயமரியாதை உள்ளிட்டவைகளை வாசிக்காமல் தவிர்த்துள்ளார்.
  • இது குறித்து பேசிய ஆளுநர் ரவி, தேசிய கீதம் இல்லாமல் தமிழக சட்டசபை தொடங்கி இருப்பது வேதனை அளிப்பதாகவும், ஆளுநர் உரையாக எனக்கு கொடுக்கப்பட்டவை பல பொய்யானவை எனவும், உண்மைக்கு மாறாக பல தகவல்கள் உள்ளதால் நான் உரையை படிக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
  • இதையடுத்து முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள், ஆளுநர் முன்பாகவே அரசு தயாரித்த உரையை ஆளுநர் ரவி படிக்காதது தவறு. இனி ஆளுநர் உரை அவைக்குறிப்பில் இடம் பெறக்கூடாது என்ற தீர்மானத்தையும் சட்டசபையில் நிறைவேற்றினார்.
  • இதனை தொடர்ந்து, ஆளுநர் ரவி தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே வெளியேறியுள்ளார். இதன் அதிமுக எம்.எல்.ஏ-க்களுடன் எடப்பாடி பழனிசாமியும் வெளியேறியுள்ளார்.
  • ஆளுநர் வெளியேறும் நிலையில், சபாநாயகர் அப்பாவு “‘ஜன கண மன’ இனிமே தான் பாடுவாங்க” என தெரிவித்துள்ளார். ஆனால், அதனையும் பொருட்படுத்தாமல் வெளியேறிய ஆளூர் ரவி, தேசிய கீதம் ஒலிக்கும் சத்தம் கேட்டு சிறிது நேரம் நின்று சென்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • இந்த கூட்டத்தொடர் விளைவால், ஆளுநர் ரவிக்கு எதிராகவும் ஆதரவாகவும் பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.
  • இது ஒருபுறம் இருக்க, ஆளுநர் ரவி சபையை விட்டு வெளியேறியதற்கு சபாநாயகரும் ஒரு முக்கிய காரணம் என தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, ஆளுநரை கோட்சேவுடன் தொடர்புபடுத்தி சபாநாயகர் பேசியதாகவும், ஆளுநர் தேசிய கீதத்திற்காக எழுந்த போது சபாநாயகர் கால அட்டவணையை பின்பற்றவில்லை என்ற கருத்தும் பரவி வருகிறது. இதனால் சபையின் கவுரவம் கருதியே ஆளுநர் வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.

விஜயா பணத்தை திருடியது சத்யா தான்.., முத்துவுக்கு தெரியவரும் உண்மை.., மீனாவின் நிலைமை என்னாகும்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here