தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு…, டிசம்பர் 5க்குள் இதுக்கு APPLY பண்ணிடுங்க!! 

0
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு..., டிசம்பர் 5க்குள் இதுக்கு APPLY பண்ணிடுங்க!! 
தமிழக பள்ளி கல்வித் துறையானது, மாணவர்களை கல்வியில் மட்டுமல்லாமல் நடைமுறை சுற்றுச்சூழலை பாதுகாத்து தலை சிறந்தவர்களாக மாற்றவும் தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த ஆண்டு மிஷன் இயற்கைத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு சிறந்து விளங்கிய பள்ளிகள் மற்றும் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. தற்போது, இந்த திட்டம் தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது.
  • இதில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் மிஷன் இயற்கைத் திட்டத்திற்கு 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை ஈடுபடுத்த விரும்பும் பள்ளிகள் வரும் டிசம்பர் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
  • இதற்கான செயல்முறை விளக்கம் அந்தந்த பள்ளிகளின் சுற்றுச்சூழல் ஆசிரியர்களுக்கு ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட உள்ளது.
  • இந்த திட்டத்தை செயல்படுத்த, வரும் டிசம்பர் 29 முதல் பிப்ரவரி 10, 2024 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து, பிப்ரவரி 10 முதல் 17 க்குள் அதனை வீடியோ ஆவணமாக சமர்பிக்க வேண்டும்.
  • வரும் பிப்ரவரி 20 முதல் 29 வரை இந்த திட்டத்திற்கான மதிப்பீடு செய்யப்பட்டு,  இறுதியாக பள்ளிக்கல்வித்துறை ஆலோசனையின் பேரில் விருது வழங்கும் விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here