தமிழக மக்களே…, தொடர் விடுமுறைக்கு ரெடியா?? உங்களுக்காகவே சிறப்பு ஏற்பாடு செய்த போக்குவரத்து கழகம்!!

0
தமிழக மக்களே..., தொடர் விடுமுறைக்கு ரெடியா?? உங்களுக்காகவே சிறப்பு ஏற்பாடு செய்த போக்குவரத்து கழகம்!!
தமிழக மக்களே..., தொடர் விடுமுறைக்கு ரெடியா?? உங்களுக்காகவே சிறப்பு ஏற்பாடு செய்த போக்குவரத்து கழகம்!!

நாடு முழுவதும் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி முதல் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவின் இறுதி நாளான, ஆயுத பூஜை (துர்கா), விஜய தசமி வரும் அக்டோபர் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் கொண்டாடப்பட இருக்கிறது. இதையடுத்து, அக்டோபர் 21 ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் தொடர் விடுமுறை வர உள்ளதால், தமிழகத்தில் போக்குவரத்து கழகம் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அதாவது, தொடர் விடுமுறை வருவதையொட்டி பொதுமக்கள் சிரமமின்றி பயணம் செய்ய அக்டோபர் 21 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து சென்னைக்கு 300 சிறப்பு பேருந்துகளும், அக்டோபர் 20 முதல் 22 ஆம் தேதி முதல் திருச்சியில் இருந்து கோவை, மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக கும்பகோணம் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உச்சத்தை தொடும் வெங்காயத்தின் விலை…, ஒரே வாரத்தில் ரூ. 50 உயர்வு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here