காமெடி சூப்பர் ஸ்டார் படத்தில் நடிக்கும் டிக் டாக் புகழ் ஜி.பி.முத்து – இவருக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பா!!

0

சமூக வலைத்தளமான டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டு புகழ் அடைந்த டிக் டாக் புகழ் ஜி பி முத்து நடிகர் சந்தானத்துடன் இணைந்து படத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

படத்தில் ஜிபி முத்து:

சமூக வலைத்தளமான டிக்டாக் மத்திய அரசால் சென்ற வருடத்தில் தடைசெய்யப்பட்டது. இந்த டிக்டாக் வீடியோ மூலம் பல ரசிகர்களை சிரிக்க வைத்தவர் ஜி பி முத்து.இவர் திட்டுவதை பார்க்க ஒரு பட்டாளமே இருக்கிறது எனும் அளவுக்கு அவரது வீடியோ மிகப்பெரிய அளவில் ரீச் ஆகி வந்தது. சமீபத்தில் அவர் யூடியூப் தளத்தில் அதிக பலோவர்களை வைத்திருப்பதன் அடையாளமாக சில்வர் பட்டன் வாங்கினார்.

இவ்வாறு இருக்கு ஜி பி முத்து, நடிகர் சந்தானத்துடன் இணைந்து ஒரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here