போராட்டத்தை கைவிட்ட இந்திய மருத்துவ சங்கம் – பேச்சுவார்த்தையில் உடன்பாடு.!

0

நாடெங்கிலும் கொரோனா தாண்டவம் ஆடி வருகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவரும் அயராது கொரோனாவிற்கு எதிராக போராடி வருகின்றனர். இதற்கிடையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் தாக்குதலுக்கு உள்ளாவதாக செய்திகள் வெளியாகின. இதனால் இந்திய மருத்துவ சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது அதனை கைவிட்டுள்ளனர்.

கொரோனா

Kerala tourism sector faces mass cancellations amid coronavirus ...

இந்த கொரோனா இந்தியாவில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்தியா உட்பட 205 நாடுகளுக்கு இந்த கொடிய நோயான கொரோனா பரவியுள்ளது. இந்தியாவில் மட்டும் இதுவரை 19,984 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 640 பேர் உயிரிழந்த நிலையில், 3870 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் ஏப்ரல் 21இல் முடிவடைய இருந்த ஊரடங்கு மே 3 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ சங்கம்

தேசிய மருத்துவ ஆணையம் போலி ...

இதற்கிடையே, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் தாக்குதலுக்கு உள்ளாவதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து, மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பில்லை என கூறி, தங்களது எதிர்ப்பை அரசிடம் பதிவு செய்யும் விதமாக மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து பணி செய்யும் தேசிய அளவிலான போராட்டத்தை இந்திய மருத்துவ சங்கம் அறிவித்தது.

போரோட்டம் வாபஸ்

இதனை தொடர்ந்து, டெல்லியில் இன்று காணொலி காட்சி மூலம் மத்திய அமித் ஷாவும், மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்த்தனும், மருத்துவர்கள் மற்றும் இந்தியன் மெடிக்கல் அசோசியேசன் அமைப்பினருடனும் ஆலோசனை நடத்தினர். அப்போது, நாடு முழுவதும் கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு அரசு உறுதுணையாக இருக்கும். மருத்துவர்களுக்கு தேவையான பாதுகாப்பை உறுதி செய்யும். அரசுக்கு எதிரான போராட்டத்தை கைவிடுங்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டனர்.

IMA to Go ahead with Nationwide Strike Today in Support of ...

இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, மருத்துவர்கள் தாக்குதலுக்கு எதிரான கவனஈர்ப்பு போரோட்டம் வாபஸ் பெறப்பட்டதாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here